செய்திகள் :

"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்பாடி பழனிச்சாமி

post image

கரூர் மாவட்டத்தில், 'மக்களை காப்போம்... தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப் பயணத்தில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

"எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரூரில் மு.க.ஸ்டாலின் பேசியதும், கரூர் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிப் பேசியதும், LED திரையில் காட்டப்படுகின்றன.

edappadi palanisamy
edappadi palanisamy

மக்களை ஏமாற்ற புதிய புதிய உத்திகளைக் கண்டுபிடிப்பது இவர்களது வாடிக்கை. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை தி.மு.க-வில் சேர்ப்பதுதான் செந்தில் பாலாஜியின் லட்சணம். ஸ்டாலின் பொய் பேசுவார். செந்தில் பாலாஜி பொய்யையே முதலீடாகப் பேசுபவர்.

டாஸ்மாக் ஊழல் நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்து வரக்கூடிய மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் ஊழலிலிருந்து செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது. ரூ. 40,000 கோடி ஊழல் நடைபெற்றிருக்கும் என்று ED கூறுகிறார்கள். பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்.

ஸ்டாலின் முதல்வரானால் காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளலாம் என்று கூறியவர் செந்தில் பாலாஜி. ஆனால், மாட்டு வண்டியில் மணல் அள்ளுவது குறித்து புகார் அளித்த நபரை கரூரில் வெட்டி சாய்த்து உள்ளனர். அந்த வழக்கு வேறு மாதிரி மாற்றப்பட்டுள்ளது.

கூடிய கூட்டம்
கூடிய கூட்டம்

அரவக்குறிச்சியில் உள்ள 25,000 குடும்பங்களுக்கும் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார். ஆனால், செய்யவில்லை. இந்தத் தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் வீடு வீடாக கொலுசு கொடுத்தார். இந்தத் தேர்தலில் இப்படிப்பட்ட பித்தலாட்டம் செய்பவருக்கு டெபாசிட் இழக்கச் செய்வீர்களா? இந்தப் பிரசாரத்தை முடக்கப் பார்த்தார்கள். அதையெல்லாம் மீறித் தான், இங்கு இவ்வளவு மக்கள் கூடி இருக்கிறீர்கள்.

இப்போது, இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. அதையும் மீறி மக்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உதயநிதியும், சபரீசனும் ரூ. 30,000 கோடி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தடுமாடுகிறார்கள் என தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் பேசிய ஆடியோ வெளியானது. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

இப்படிப்பட்ட ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தேர்தல் வரும் 2026 - ம் வருடம் நடைபெற இருக்கும் தேர்தல். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. தி.மு.க நிர்வாகிகளே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிரசாரத்தில் கூடிய கூட்டம்
கூட்டம்

அவர்கள் உடந்தையாக இருப்பதால்தான் தமிழகத்தில் போதைப் பொருட்களை இந்த அரசு தடை செய்யவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவது போதைப்பொருள்தான் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். காவல்துறையினர் நினைத்துப் பார்க்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வரும்.

அப்போது, பொய் வழக்குகள் போடப்பட்டது குறித்து விசாரிக்கப்படும். கண்ணியமிக்க காவல்துறை, இந்த ஆட்சியில் ஏவல் துறையாகச் செயல்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர். காவல்துறையினரை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?. திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது.

இதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய ஆட்சியர், காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் என அனைவர் மீதும் அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் திரட்டி வைத்திருக்கிறோம்.

கரூரில் சில அதிகாரிகள் இந்த ஆட்சிக்குக் கைக்கூலியாக இருக்கிறார்கள். காலம் மாற இருக்கிறது, காட்சியும் மாற இருக்கிறது. யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன். ஒருகாலத்தில் தங்கம், வைர நகைகள், பணம் எனத் திருடுவார்கள். ஆனால், இந்த ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள்.

தி.மு.க-வினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வந்தவர்கள் உடல் உறுப்புகள் இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வறுமையின் காரணமாக இருக்கும் ஏழை மக்களுக்கு ஆசை காட்டி, கிட்னியைத் திருடுவது எந்த விதத்தில் நியாயம்? எம்.சாண்ட் குவாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு தி.மு.க-விற்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு பத்து லட்சம் டன் எடுக்கிறார்கள்.

edappadi palanichami

அப்படியென்றால், 10 கோடி கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்காத குவாரி உரிமையாளர்களை மிரட்டி வாங்குகிறார்கள். தி.மு.க ஆட்சியில் அரிசி, பருப்பு என அனைத்து விலைகளும் விண்ணை முட்டுகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன.

அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன், நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை கொடுத்து, அதில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். செந்தில் பாலாஜி போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க ஆட்சி வந்தவுடன் தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும். மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம். Bye Bye ஸ்டாலின்" என்றார்.

வேடசந்தூர் தொகுதியில் 'மக்களை மீட்போம் தமிழகம் காப்போம்' - இபிஎஸ் சுற்றுப்பயணம் | Photo Album

EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்பயணம்EPS சுற்றுப்ப... மேலும் பார்க்க

"பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்பத் தயாராகி விட்டார்கள்" - சொல்கிறார் திலகபாமா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் 29ஆம் தேதி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்நடைப்பயணம்மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.அதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்மாவட்... மேலும் பார்க்க

'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains

'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடை... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஊழல் அரசு துாக்கியெறியப்பட வேண்டும்!’ - பாஜக ஆதரவு எம்எல்ஏ பேச்சால் ரங்கசாமி அப்செட்

என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் விரிசல்புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சரான பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்... மேலும் பார்க்க

கோவை: திமுக மாநகர மாவட்டச் செயலாளர் மாற்றமா? - பின்னணி என்ன?

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோவை கார்த்திக்கின் கட்சி பொறுப்பை தி.மு.க தலைமை அதிரடியாக பறித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் பின்னணி குறித்து கோவை மாவட்ட திமுகவினரிடம் விசாரித்தோம்."கோவை உள்ள... மேலும் பார்க்க