சென்னையில் நாளை தொடங்கும் வேளாண் வணிகத் திருவிழா, சிறப்பம்சங்கள் என்ன?
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு வெள்ளிக்கிழமை காலை 8,419 அடியிலிருந்து வினாடிக்கு 7,645 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.14 அடியிலிருந்து 119.02 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 91.91 டிஎம்சியாக உள்ளது.