சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
ரஷியா தொடங்கிய போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் உதவுமாறு கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றி ஸெலென்ஸ்கி, உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார், போர் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தப் போர் ஒரு ஆபத்தான ஆயுதப் போட்டியை கட்டவிழ்த்துவிட உதவுவதாக எச்சரித்தார்.
உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் அசுரத்தனமான புதுமைகளை விவரிக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் வருகை மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி "மிகவும் அழிவுகரமானது" என்று ஜெலென்ஸ்கி கூறினார். மேலும் ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
மேலும், ரஷிய அதிபர் புதின் போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட ரஷியாவை இப்போது போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்று அவர் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் கூறினார்.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்து ஜெலென்ஸ்கின் கருத்தை கூறியுள்ளார்.
செவ்வாயன்று டிரம்ப், ரஷியாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில்தான் உக்ரைன் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் இந்த வெற்றிவாகையைச் சூடும். நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போா் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்.
ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தொடங்கியுள்ளாா். ஓா் உண்மையான ராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போா் சில வாரங்களில் முடிந்துவிடும். தற்போது புதினும், ரஷியாவும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா். ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க உக்ரைனுக்கு இதுவே சரியான தருணம்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும். நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், இது ஒரு அசாதாரண போர்க்கள மாற்றமாக இருக்கும். நேட்டோ வான்வெளியை மீறும் ரஷிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.
ரஷியாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சண்டையில் சிக்கியுள்ளது.