செய்திகள் :

தங்கம், வெள்ளி நிலவரம்: இன்று எவ்வளவு உயர்ந்து?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த செப்.22-இல் பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.83,440-க்கும், செப். 23-இல் பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.85,120-க்கும் விற்பனையான நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800-க்கு விற்பனையானது.

தொடா்ந்து, வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.84,080-க்கு விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ320 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.10,550-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400-க்கும் விற்பனையாகிறது.

புதிய உச்சத்தில் வெள்ளி விலை

வெள்ளி விலை தொடா்ந்து மூன்று நாள்களாக மாற்றமின்றி கிராம் ரூ.150-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.50 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளி விலை புதிய உச்சமாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.153-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.53 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

The price of Gold in Chennai today is ₹ 40 per gram and ₹ 84,400 per 8gram

செஞ்சி: தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலி

செஞ்சி அருகே தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை... மேலும் பார்க்க

பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படம் எடுத்த சக ஊழியர் கைது

மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்ததாக மின் வாரிய சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க

ஹைதராபாத் எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே பேருந்து தீ: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 35 பயணிகள்!

ஹைதராபாத் (தெலங்கானா): ஹைதராபாத்தில் உள்ள எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 35 பயணிகளும் பாதுகாப... மேலும் பார்க்க

ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி

ரஷியா தொடங்கிய போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் உதவுமாறு கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றார... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு வெள்ளிக்கிழமை காலை 8,419 அடியிலிருந்து வினாடிக்கு 7,645 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வ... மேலும் பார்க்க

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

சென்னை: சென்னையில் பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.சென்னை வானகரத்தைச் சோ்ந்த ஒரு பல் மருத்துவா், பேஸ்புக் சமூக ஊடகத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு ... மேலும் பார்க்க