vaazhai படம் பாத்துட்டு Stalin சார் என்கிட்ட பேசின விஷயம் - Mari Selvaraj | Udha...
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதியில் 3 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ 3 வது நாளாக எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகை செடிகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் செண்பகத்தோப்பு, அழகர்கோவில் அருகே மருதடி பீட், கன்னிமார் ஊத்து பீட் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி தீ மளமளவென எரிந்து வருகிறது.

மலைப்பகுதியில் பற்றிய தீ சரணாலய பகுதி முழுவதும் எரிந்து வருகிறது. திடீரென பற்றி எரிந்த காட்டுத்தீயால் பல அரிய வகை மூலிகைகள் பாதிப்படைவதற்கும் மற்றும் சிறிய வகை வனவிலங்குகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக மலைப்பகுதியில் தீயானது வேகமாகப் பரவி வருகிறது. 3 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்று தீயானது அணைக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.