செய்திகள் :

ஓடிடியில் வெளியானது காட்டி!

post image

நடிகை அனுஷ்காவின் காட்டி படம் அமேசான் பிரைமில் ஓடிடியில் இன்று (செப்.26) வெளியானது.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை அனுஷ்கா பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் எந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா நடித்த ‘காட்டி’ (ghaati) திரைப்படம் செப். 5ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

Actress Anushka's film Gatti was released on OTT on Amazon Prime today (September 26).

ஓய்வை அறிவித்த புஸ்கெட்ஸ்..! தலைசிறந்த மிட்ஃபீல்டர்!

இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ புஸ்கெட்ஸ் (வயது 37) கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த எம்எல்எஸ் சீசனுடன் தனது கால்பந்து பயணத்தை முடித்துகொள்வதாகக் கூறியுள்ளார். இத்தாலிய... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் பாடிய தனுஷ்..! வைரல் விடியோ!

நடிகர் தனுஷ் திருச்சியில் கொட்டும் மழையில் பாடல் பாடிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள... மேலும் பார்க்க

தாழ்மையுடனும் பெருமையுடனும்... கலைமாமணி விருது பற்றி அனிருத்!

தமிழக அரசின் கலைமாமணி விருது குறித்து இசையமைப்பாளர் அனிருத் மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இந்த விருதினை தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிக... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் பான் இந்திய திரைப்படம்..! தலைப்பு, டீசர் தேதி!

நடிகர் விஜய் சேதுபதியின் பான் இந்திய படத்தின் டீசர் வரும் செப்.28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் புரி ஜெகந்நாத் இயக்குகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப... மேலும் பார்க்க

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன.இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் ... மேலும் பார்க்க

இறுதியில் பாகிஸ்தான்; இந்தியாவுடன் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழ்க்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில்... மேலும் பார்க்க