செய்திகள் :

செப். 28 திறக்கப்படுகிறது தி.நகர் மேம்பாலம்! முடிவுக்கு வரும் வாகன நெரிசல்

post image

சென்னை மாநகராட்சியால் தெற்க உஸ்மான் சாலையை சிஐடி நகர் முதன்மை சாலையுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலம், செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவிருக்கிறது.

ரூ.164.92 கோடியில் சுமார் 1.2 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், தி.நகர் என்றாலே போக்குவரத்து நெரிசல் என்ற நிலையை மாற்றும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், கட்டுமானப் பணிகளின்போது, பர்கித் சாலை முதல் பழைய மேம்பாலம் வரை கட்டுமானங்களை இடித்து, புதிதாக இணைக்கும் பணிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்க ஆறு மாதங்கள் ஆனதால் பணிகள் முடிவடையவும் தாமதம் ஏற்பட்டது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் வழியாகச் செல்வோருக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த 2 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க இதுவரை பல மணி நேரம் ஆகியிருக்கும். இந்த மேம்பாலம் வழியாகச் சென்றால் சில மணித் துளிகளில் கடந்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

தவெக கொடி: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தவெக கொடி தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது 6 வாரங்களில் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பர... மேலும் பார்க்க

காவல்நிலைய விசாரணையில் சிறுவன் பலி: 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை

காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (25-09-2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல... மேலும் பார்க்க

என்னைப் போல பேசுவதாக ஆப்பிரிக்க அதிபருக்கு பாராட்டு: சீமான்

சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்தவர்... மேலும் பார்க்க

கோவையில் லாரி மோதி தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் பானுமதி பலி!

கோவையில், ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி சம்பவ இடத்திலேயே பலியானார்.கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமரா... மேலும் பார்க்க