லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!
நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!
நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ’சர்வம் மாயா’ என்ற படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரியவருகிறது.
ஃபயர்ஃபிளே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’சர்வம் மாயா’ என்ற படத்தினை அகில் சத்யன் இயக்கியுள்ளார்.
மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தினை இயக்கிய சத்தியன் அந்திகாட்டின் மகன்தான் அகில் சத்யன். இவர் கடைசியாக பச்சாவும் அற்புத விளக்கும் என்ற படத்தினை இயக்கியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் நிவின் பாலி தனது இன்ஸ்டா பக்கத்தில் இயக்குநரை டேக் செய்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் அகில் சத்யன் ப்ரோ! மாயா வெளியீடு முடிவாகிவிட்டது. டிசம்பரில் சந்திப்போம்!” எனக் கூறியுள்ளார்.
ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ள இந்தப் படம் கிறிஸ்துமஸுக்கு வெளியாகிறது.
தமிழில் பென்ஸ் படத்தில் நிவின் பாலி வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.