செய்திகள் :

லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

post image

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.

யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

வன்முறையையடுத்து, தீவிர பாதுகாப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர்

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமையில் (செப். 23) மோசமடைந்ததையொட்டி, அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

இதனிடையே, புதன்கிழமை காலையில் இளைஞர்கள் குழு ஒன்று, தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதுடன், பாஜக அலுவலகத்தையும் தாக்க முற்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது, 4 பலியாகினர்; மேலும், 30 காவல்துறையினர் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மோசமான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார்.

லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறிய மத்திய அரசு, பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தில் சிலருக்கு மகிழ்ச்சி இல்லை என்று சோனம் மீது குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், மாநிலத்தில் வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு அல்லது நாளை காலையில் அவர் லடாக்கைவிட்டு வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

Ladakh: Sonam Wangchuk Arrested Under Stringent NSA

மழை பாதிப்பு: பிரதமர் மோடியுடன் முதல்வர் ஃபட்னாவிஸ் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது கனமழையால் அண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார். ... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள், அசாம் அரசின் சார்பில் நடைபெறும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்.19 ஆம... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க