செய்திகள் :

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் இயக்குநராக களமிறங்கும் அவர்களின் மகள் தியா! - என்ன படம் தெரியுமா?

post image

இயக்குநராக களமிறங்குகிறார் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா சூர்யா.

சினிமாவில் இயங்கி வரும் லைட்வுமன்கள் குறித்து தியா சூர்யா `லீடிங் லைட்' என்ற தலைப்பில் ஒரு டாக்கு டிராமா குறும்படத்தை எடுத்திருக்கிறார்.

Diya Suriya's Docu Drama
Diya Suriya's Docu Drama

பாலிவுட்டில் பணிபுரிந்து வரும் லைட்வுமன்களிடம் பேட்டி கண்டு இந்த குறும்படத்தை அவர் எடுத்திருக்கிறார்.

லைட்வுமன்களாக அவர்கள் பணியாற்றிய அனுபவத்தையும், அவர்கள் சந்திக்கும் விஷயங்களையும் விவரிக்கும் குறும்படமாக இதை எடுத்திருக்கிறார் தியா சூர்யா.

இந்தக் குறும்படம் ஒளி தரும் கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அவர்களின் வலிமையைப் பற்றிப் பேசுகிறது.

இந்தக் குறும்படத்தை சூர்யா - ஜோதிகாவே தங்களுடைய 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்கள்.

உலகமெங்கும் பாராட்டுகளை அள்ளி வரும் தியாவின் இந்தக் குறும்படம் ஆஸ்கர் தகுதிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் ரீஜென்சி திரையரங்கில் திரையிடப்படுகிறது.

Diya Suriya
Diya Suriya

செப்டம்பர் 6-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்கு இந்தக் குறும்படம் திரையிடப்படவுள்ளது.

இயக்குநராக அவதரிக்கும் முதல் திரைப்படத்திலேயே பல முக்கியமான மேடைகளுக்குச் செல்லும் தியாவுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

What to watch - Theatre & OTT: அந்த ஏழு நாட்கள், Right, Balti, Karam; இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

அந்த ஏழு நாட்கள்(தமிழ்)அந்த ஏழு நாட்கள்நடிகர்கள் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீ ஸ்வேதா மகாலட்சுமி நடிப்பில் அறிமுக இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படமான இது வியாழன் (செப்... மேலும் பார்க்க

``இதைச் செய்தால்தான் திரைத் துறையினர் ஓட்டு போடுவார்கள்" - ஆர்.வி.உதயகுமார்

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படம் 'இரவின் விழிகள்'. தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத... மேலும் பார்க்க

ரிலீஸ் பிரச்னைனா அதுக்கு ரெட் ஜெயன்ட்தான் காரணமா?- போஸ் வெங்கட் சொல்வது என்ன?

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படம் 'இரவின் விழிகள்'. தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத... மேலும் பார்க்க

"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் பேச்சு பதில் என்ன?

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி

2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதான இது, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, ... மேலும் பார்க்க