செய்திகள் :

BiggBoss: 100 கேமராக்கள், 100 நாட்கள், 1 வெற்றியாளர்; பிக் பாஸ் நிகழ்ச்சி உலகளவில் தொடங்கியதெப்படி?

post image

aaaஉலக அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி பல்வேறு மனங்களில் இடம்பிடித்ததோ, அதேபோன்று தமிழக மக்களையும் இந்த நிகழ்ச்சி கவர்ந்திருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்க இருக்கிறது. ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இயல்பான சுவாரஸ்யமான அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி இந்த பிக் பாஸ் சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 9, ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளங்களில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் என்ற பெயர் இன்று இந்திய தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக மாறியுள்ளது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி சமூக உரையாடல்களையும், விவாதங்களையும் உருவாக்கும் ஒரு கலாசார நிகழ்வாகவே இந்த பிக் பாஸ் மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் உலக தொடர்பு ஏதும் இன்றி பிரபலங்கள் பல நாட்கள் ஒரே இடத்தில் வாழும் இந்த நிகழ்ச்சி, அதன் விறுவிறுப்பான போட்டிகள், உணர்ச்சிகரமான தருணங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என பல்வேறு விஷயங்களால் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆனால் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியின் தொடக்கம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும், இது எப்படி உலக அளவில் பிரபலமானது என்பது குறித்தும் இதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும் எங்கே விரிவாக காணலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் எங்கிருந்து வந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் இதன் வேர் ஜான் டி மோல் ஜூனியர் (John de Mol JR) என்பவரால் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் (BIG brother) என்ற ஷோவில் மூலம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்தில் முதல்முறையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் அடிப்படை ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய புகழ்பெற்ற Nineteen Eighty Four என்ற நாவலில் வரும் பிக் பிரதர் என்ற கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் அந்த நாவலில் ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக எழுதப்பட்டிருக்கிறது.

George Orwell

இதே போலவே இந்த நிகழ்ச்சியிலும் போட்டியாளர்கள் 24 மணிநேரம் கேமராக்கள் மற்றும் மைக்ரோ போன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு பிக் பிரதர் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் கென்யா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பிக் பிரதர் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியாக இது உருவெடுத்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி உருவெடுத்து இருக்கிறது.

இந்தியாவில் பிக் பாஸ்

2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்தி பிக் பாஸ் 18 சீசன்கள் முடிவடைந்து 19வது சீசன் நடக்கிறது. இதுவரை அர்ஷத் வர்ஷி, ஷில்பா ஷெட்டி, அமிதாபச்சன், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகியோர் தொகுத்து வழங்கி இருக்கின்றனர். 19வது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

ஷில்பா ஷெட்டி என்ற உடன் பலரும் ஷில்பா செட்டி பிக் பாஸ் இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார் என்று கேள்விப்பட்டிருப்போம். அவர் இங்கிலாந்தில் ஒளிபரப்பான செலிபிரிட்டி பிக் பிரதர் ( celebrity Big brother) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றி இந்தியாவில் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது.

இதன் விளைவாகவே 2008இல் ஒளிபரப்பான ஹிந்தி பிக் பாஸ் இன் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஷில்பா செட்டிக்கு கிடைத்தது.

தமிழில் 2017ல் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. தமிழில் கமலஹாசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளனர். இது போன்று கனடா, தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் அந்ததெந்த மாநிலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் இருந்து கலர் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. அதேபோல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

ஹிந்தி தமிழ் போன்ற மொழிகளில் தொலைக்காட்சி சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து டிஜிட்டல் தளங்களுக்காக பிரத்தேகமாக ”பிக் பாஸ் OTT” என்ற வடிவிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது 24 மணி நேரமும் நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கும் வசதியை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

பிக் பாஸ் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்ப கட்டமைப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய கூட்டம் வேலை பார்க்கிறது என்று நம் கேள்விப்பட்டிருக்கும். ஆனால் அது எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பிக் பாஸ் வீட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் தானியங்கி கேமராக்கள், மனிதர்களால் இயக்கப்படும் கேமராக்கள் என இருவிதங்களில் செயல்படுகின்றன. போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் உரையாடல்களையும் பதிவு செய்ய 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

சுமார் 450 பேர் கொண்ட குழு இந்த நிகழ்ச்சிக்காக செட்டில் தங்கி வேலை செய்கின்றனர். இதில் கேமராமமென்கள், எடிட்டர்கள், தயாரிப்பு குழுவினர் என பலர் அடங்குவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டை சுற்றி கருப்பு நிற திரையால் மறைக்கப்பட்ட ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து கேமராக்கள் போட்டியாளர்களை படம் பிடிக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே ஆள் இருப்பது தெரியாத வண்ணம் இந்த திரை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நேரடி காட்சிகளை வழங்க அங்கே தயாரிப்பு கட்டுப்பாட்டு அறையும் உள்ளது.

இங்குள்ள குழுவினர் தானியங்கி கேமராக்களை கட்டுப்படுத்துவது மற்றும் முக்கிய நிகழ்வுகளை தவறவிடாமல் பதிவு செய்வது என்பதை உறுதி செய்கின்றனர்.

அதுபோக போட்டியாளர்கள் அனைவரும் தனிப்பட்ட ஆடியோ மைக்ரோபோன்களை அணிந்து இருப்பார்கள். இதன் மூலம் அவர்களின் உரையாடுகளையும் பதிவு செய்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் யுக்தி

பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் செயல்பாடுகளை மட்டும் எடுத்துப் போவதில்லை மாறாக பார்வையாளர்களின் ஆர்வங்களை தக்கவைக்க தயாரிப்பாளர்கள் குழு பல்வேறு யுத்திகளை கையாளுகின்றனர். ஒரு ஆய்வின் படி நிகழ்ச்சியின் எடிட்டிங், உணர்ச்சிகரமான தருணங்களை முன்னிலைப்படுத்துவது, பெண்கள் தொடர்பான உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என பார்வையாளர்களை தன்வசப்படுத்த பல்வேறு யுத்திகளை கையாளுவதாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

18-வது இந்தி பிக் பாஸ் சீசன் தொலைக்காட்சி, ஜியோ சினிமா என இரண்டிலும் சேர்த்து 20.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது. மேலும் டிஜிட்டல் தளங்களிலும் சாதனையை படைத்தது. இது போன்ற பிரமாண்டமான நிகழ்ச்சியின் எதிர்பாராத திருப்பங்கள், வாரம் வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகள், பார்வையாளர்களின் வாக்குகள் மூலம் நடைபெறும் வெளியேற்றங்கள் போன்றவை பார்வையாளர்களை தவிர முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி ஒரு சமூக நிகழ்வாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய போட்டியாளர்கள், புதிய விவாதங்கள், புதிய தொகுப்பாளர்களுடன் இந்திய தொலைக்காட்சி உலகில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

``இந்த அளவு வன்முறை மனிதத்தன்மையை அழித்துவிடும்'' - நிவேதா பெத்துராஜ் வேதனை

செய்தித் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வன்முறை தொடர்பான காட்சிகள் பகிரப்படுவது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு முதல் செய்திகள் வரை அனைத்து... மேலும் பார்க்க

Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்! | Visual Stories

Janhvi Kapoorஅவள் நடை – இசை, அவள் புன்னகை – கவிதை, அவள் பார்வை – ஓர் ஓவியம்.Janhvi Kapoorஅவள் புன்னகை – வானவில் கூட நிறம் கற்கும் ஓர் அதிசயம்.Janhvi Kapoorஇசை பிடிக்காதவர்களுக்கும், அவள் நடக்கும் போது... மேலும் பார்க்க

துடும்பு முதல் கொக்கறை வரை... பாரம்பரிய இசைக்கருவிகளின் அணிவகுப்பு! |Photo Album

பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்கருவிகள்பாரம்பரிய இசைக்க... மேலும் பார்க்க

ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள் உட்பட பலர் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எல்லாரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்கள... மேலும் பார்க்க