செய்திகள் :

"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் பேச்சு பதில் என்ன?

post image

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் குழு, இப்படத்தின் புரோமோஷனை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்ததை அடுத்து, கோவை மற்றும் மதுரையில் ப்ரீ ரிலீஸ் ரீவண்ட் நடைபெற்றது. இப்போது திருச்சியில் நடைபெற்றது.

இவ்விழாவில், 'பரிதாபங்கள்' பிரபலம் கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் தனுஷிடம் சில கேள்விகள் கேட்டனர். அதில், "கோயமுத்தூரில் பிரபல செஃப் ஒருவர் இருக்கார், அவரோட கதைதான் இந்தப் படம்னு சமூக வலைத்தளங்களில் பேசிக்கிறாங்க, அது உண்மையா சார்?" என்றனர்.

அதற்குப் பதிலளித்த தனுஷ், "அதெல்லாம் கிடையாது, இட்லி கடை திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதைதான். நான் சிறு வயதில் இருந்த ஊரில் வாழ்ந்தவர்களை வைத்து கற்பனையாக உருவாக்கிய கதைதான் இட்லி கடை" என்றார்.

தனுஷ், கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம்
தனுஷ், கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம்

சுதாகர், "இட்லி கடை ஆடியோ லாஞ்ச்சில் இட்லி வாங்க கூட காசு இல்லைனு சொன்னீங்க, அப்பா இயக்குநராக இருந்தும், உண்மையிலேயே அவ்வளவு கஷ்டமா?" என்று கேட்டார்.

அதற்கு தனுஷ், "1991-ல் அப்பா இயக்குநர் ஆனதுக்கு அப்புறமும்கூட குடும்ப கஷ்டம் இருந்தது. அப்பாவுக்கு நாங்க 4 பிள்ளைங்க, எங்கள வளர்க்க அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். அவர் கஷ்டப்பட்டத பார்த்து, நாங்க அவர்கிட்ட எந்தக் காசும் கேட்டு தொந்தரவு செய்யமாட்டோம்.

கிராமத்துல பூ எடுத்து, வயல் வேலை செஞ்சு காசு சேமிச்சு, எங்களுக்குத் தேவையான சின்ன விஷயத்துக்கூட கஷ்டப்பட்டுதான் வாங்குவோம். அப்படிதான் இட்லி வாங்கக்கூட காசு இல்லைனு சொன்னேன். 1994, 1995 ஆண்டுகளில் குடும்ப நிலம மாறிடுச்சு, நல்லாகிட்டோம். அதுவரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி

2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதான இது, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, ... மேலும் பார்க்க

"மார்க்குக்காக கொஞ்சம் படிங்க, வாழ்க்கைக்காக நிறைய படிங்க" - சிவகார்த்திகேயன் அட்வைஸ்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்க... மேலும் பார்க்க

Server Sundaram: ``சுட சுட அப்படியே இருக்கிறது; திரைக்கு வரும், ஆனால்" - ரிலீஸ் குறித்து இயக்குநர்

சந்தானம் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் சர்வர் சுந்தரம்'. திரைப்படம் முடிக்கப்பட்டப் பிறகு சில விஷயங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சர்வர் ச... மேலும் பார்க்க

"கேப்டன் இருந்திருந்தால் நான் தேசிய விருது வாங்கியதைக் கொண்டாடியிருப்பார்னு சொன்னாங்க" - MS பாஸ்கர்

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு 'பார்க்கிங்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது.டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி ம... மேலும் பார்க்க