நடிகர்களை அழைத்து வந்து விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு: நயினார் நாகேந்திரன்
ஓய்வை அறிவித்த புஸ்கெட்ஸ்..! தலைசிறந்த மிட்ஃபீல்டர்!
இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ புஸ்கெட்ஸ் (வயது 37) கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த எம்எல்எஸ் சீசனுடன் தனது கால்பந்து பயணத்தை முடித்துகொள்வதாகக் கூறியுள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்த செர்ஜியோ புஸ்கெட்ஸ் மிட் ஃபீல்டராக 2008 முதல் 2023 வரை பார்சிலோனா அணியில் விளையாடினார்.
தற்போது, 2023 முதல் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார். மெஸ்ஸியின் அணியில் இவர் தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கிறார்.
பந்தை லாவகமாக பாஸ் செய்வதில் வல்லவரான ஒவரை, கால்பந்து வரலாற்றிலேயே தலைசிறந்த மிட்ஃபீல்டர்களுல் ஒருவராக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
ஸ்பெயின் அணிக்காக 2020-இல் தனது ஓய்வை அறிவித்த இவர் கிளப் போட்டிகளிலும் இருந்தும் நடப்பு எம்எல்எஸ் சீசனுடன் முடித்துகொள்வதாக அறிவித்துள்ளார்.