டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும்நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், சர்வதேச உலக ஒழுங்கை டிரம்ப் மதிப்பதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் ஒரு மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.
ஐநா அகதிகள் நிறுவனம், ஐநா அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR), குழந்தைகளுக்கான ஐநா அமைப்பு, ஐநா சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியம் (UNICEF), செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors without Borders) உள்ளிட்ட அமைப்புகளைக் குறிப்பதாகத் தெரிகிறது.
காஸாவுடனான போரில் இஸ்ரேலுக்கு டிரம்ப்பின் ஆதரவையும், உக்ரைனுடனான போரில் ரஷியாவுடன் டிரம்ப்பின் பேச்சுவார்த்தை முயற்சியையும் குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர் அஸ்லே ஸ்வீன், ``அமைதிக்கான நோபலை பெற டிரம்ப்புக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை’’ என்று தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டது, நட்பு மற்றும் கூட்டாளி நாடுகளுடனான வர்த்தகப் போரைக் குறிப்பிட்ட ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனமும், டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் குறித்து எதிர்மறையாகவே பதிலளித்தது.
இந்தியா - பாகிஸ்தான் போரையும் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தாலும், அதனை இந்தியா தரப்பில் இருந்து தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், டிரம்ப்புக்கு நோபல் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க:ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?