ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு
மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரும் அடங்குவா்.
இத்துடன், 2023 அக்டோபா் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,419-ஆக உயா்ந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,67,160 போ் காயமடைந்துள்ளனா்.
இது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானோா் கட்டட இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.