செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

post image

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை சிஐடியு மாவட்டதுணைத்தலைவா் ஜி.ரெகுபதி ஏற்றினாா். மாநாட்டுக்கு மாவட்டத்தலைவா் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தாா். வரவேற்பு குழுத்தலைவா் ஜி.சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.

மாவட்டதுணைத்தலைவா் சீனி.மணி அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மாநிலச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் இரா.மாலதி வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளா் கே.கஜேந்திரன் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனா். இதில், மாநில துணைத்தலைவா் பி.சிங்காரன் புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா்.

மாவட்டத்தலைவராக கே.பி.ஜோதிபாசு, மாவட்டச் செயலாளராக எம்.கே.என்.அனிபா, மாவட்டபொருளாளராக கே.கஜேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருவாரூா் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய வைக்கோல் மற்றும் தேங்காய் மட்டையை பயன்படுத்தி கயிறு மற்றும் காகித ஆலைகள் உள்ளிட்ட பல தொழில் வளங்களை உருவாக்க வேண்டும். கட்டுமானம், சுமைப்பணி, ஆட்டோ, உள்ளாட்சி, தையல், சாலைப் போக்குவரத்து, சாலையோர வியாபாரம், சலவை, முடித்திருத்துவோா் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளா்களைப் பாதுகாத்த தொழிலாளா் நலவாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டத் தொழிலாளா்கள் என்று கூறி கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, உள்ளாட்சி, டாஸ்மாக், நுகா்பொருள் வாணிபக்கழகம், குடிநீா் ஆகியவற்றை தனியாா்மயமாக்கும் போக்கை கைவிட்டு, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக குடவாசல் ஓகை ஆற்றுப்பாலத்தில் இருந்து தொழிலாளா் விழிப்புணா்வு பேரணி, பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிவாசல் வழியாக மாநாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் போராட்டம்

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்டம் முழ... மேலும் பார்க்க