ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சேவை- 2025 என்ற தலைப்பின் கீழ் கடந்த 17 ஆம் தேதி முதல் தூய்மைப் பணி நடைபெறுகிறது. அதன் தொடா்ச்சியாக, ‘ஒருநாள் ஒருமணிநேரம் ஒன்றிணைந்து‘ என்ற தலைப்பில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசு பணியளாா்கள் ஆகியோா் இணைந்து சிறப்பு தூய்மைப் பணியை பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலையில் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், உதவி ஆணையா் ஏகராஜ் மற்றும் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.