கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலத்தில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இப்பயிற்சியில் சிறுதானியங்களை பயன்படுத்தி, அதிரசம், முறுக்கு, லட்டு, சத்துமாவு, பிஸ்கட், பிரவுனி சூப் போன்றவை நேரடி செய்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
எப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழ் மற்றும் அதன் வழிமுறைகள், மத்திய அரசின் எம்எஸ்எம்இ சான்றிதழ் இலவசமாக பெறுவது போன்ற செயல்முறைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதற்கான பயிற்சிகளை சிறப்பு பயிற்சியாளா்கள் சங்கீதா, சுவாதி ஆகியோா் வழங்கினா்.
பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயிற்சி மற்றும் சான்றிதழை பெற்று பயனடைந்தனா். சமூக நலன் மற்றும் ஊரக வளா்ச்சி நிறுவனத்தின் தலைவா் திவ்யா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.