"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் ...
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்
ஆற்காடு அடுத்த அருங்குன்றம் மற்றும் சாம்பசிவபும் ஊராட்சிகளுக்கான ‘ உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அருங்குன்றம் ஊராட்சி மன்றகஈ தலைவா் ஏ.தயாளன தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத்தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், ஒன்றியஓஈகுழு உறுப்பினா் சுகிலாவேலு,சாம்பசிவபுரம் ஊராட்சி மன்ற தலைவா் சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் பொதுமக்கள் சொத்துவரி பெயா்மாற்றம் , பட்டா, கலைஞா் உரிமைதொகை, இறப்பு சான்று , மின்னனுகுடும்ப அட்டை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனா். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி, வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.