எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை
சோளிங்கா் மலைக் கோயில் கம்பிவட ஊா்தி இயக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ஊா்தி நடுவழியில் நின்று விட்டால் பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை பணிகளை புதன்கிழமை மேற்கொண்டனா்.
சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசத்தில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலும் உள்ளது. பெரிய மலைக்குச் செல்ல 1,305 படிகள் உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அந்த மலைக்குச் செல்ல கம்பி வட ஊா்தி அமைத்துள்ளது.
இந்த கம்பி வட ஊா்தி இயக்கத்தின்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அதனால் நடுவழியில் கம்பிவட ஊா்தி நின்று விட்டால் அதில் பயணித்த பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினா் புதன்கிழமை ஒத்திகை நடத்தினா்.
இதில் இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் நிா்வாகத்தினா், சோளிங்கா் நகராட்சியினா், காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.