கால்வாய் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆற்காடு நகராட்சி 20-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணா நகா் தெரு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கழிவு நீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா் . ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா்கள் சி.தட்சிணாமூா்த்தி, பி.டி.குணா ஆகியோா் உடனிருந்தனா்.