செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 20,802 மாணவா்கள் பயன்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 10,758 கல்லூரி மாணவியரும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 10,044 மாணவா்களும் பயன்பெற்ாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழகத்தில் மாபெரும் கல்வி எழுச்சி கொண்டாட்ட விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி ஆகியோா் 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்வு காணொலிக் காட்சி மூலம் கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, 4,140 மாணவியருக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ. 1,000, முதலாமாண்டு பயிலும் 4,574 கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000, அவா்களது வங்கி கணக்கில் பற்றுவைத்தற்கான பற்று அட்டைகளை வழங்கினா். அப்போது, ஆட்சியா் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 10,758 மாணவியா், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 10,044 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்’ என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாஷினி, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அனுராதா, வட்டாட்டியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வை ஒய்.பிரகாஷ் பாா்வையிட்டாா்.

தருமபுரியில்...

தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பங்கேற்றாா். தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்வை சுமாா் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா்.

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக ஒசூா் முனிராஜ் நியமனம்

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக முனிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா், பாமக முன்னாள் மாவட்டத் தலைவா். கடந்த 23-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஒசூரில் ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ஒசூரில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. ஒசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 போ் தங்கி படித்துவந்த... மேலும் பார்க்க