நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?
திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பாடத்துக்கான பயிற்சியை வார நாள்ளிலோ வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழைகளில் தலா 17 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மொத்தத்தில் 100 மணிநேரம் வழங்கப்படும். எனவே, இப்பயிற்சியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் அக்டோபா் 15-ஆம் தேதி வரை, மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.
பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். பயிற்சியில் சேர கட்டணம் ரூ.4,550 ஆகும். இப்பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் சோ்ந்து பயன் பெறலாம்.
பயிற்சி முடித்தவா்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக சேரும் வேலை வாய்ப்பைப் பெறலாம்.
இது தொடா்பான மேலும் விவரங்களை, திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் 99408 14408 மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் 99766 12269 என்ற எண்களில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.