18 பவுன் நகை திருட்டு
மன்னாா்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து பீரோவில் இருந்த 18 பவுன் நகையை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.
கண்டிதம்பேட்டை வடக்குத்தெரு கிருஷ்ணமூா்த்தி தனது விவசாய நிலகத்திற்கு சென்றுவிட்டாா். மகன் சென்னையில் பணியாற்றுகிறாா். மனைவி நளினி, மருமகள் அனிதா, பேரன் இருந்தனா். அனிதா கல்லூரியில் பேராசிரியராக இருப்பதால் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டாா்.
வீட்டைப் பூட்டிவிட்டு நளினி பேரனுடன் பால்வாடிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்த போது
மாடி சமையலறை மேற்கூரை பிரிக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு 18 பவுன் நகை திருடப்பட்டது தெரிய வந்தது.
பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மோப்ப நாய் கொண்டு சோதனை நடைபெற்றது.