வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது:
வெனிசுலாவில் வியாழக்கிழமை நண்பகல் 12.25 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான அது, மேனே கிராண்டே நகருக்கு 24 கி.மீ. தொலைவிலும், தலைநகா் கராகஸுக்கு 600 கி.மீ. தொலைவிலும் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அந்த மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிபா் பல மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டன. இருந்தாலும், இதில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.