செய்திகள் :

கொலை வழக்கில் தளி எம்எல்ஏ சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

பெரியாா் திராவிடா் கழக மாவட்ட அமைப்பாளா் கொலை வழக்கில் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட பெரியாா் திராவிடா் கழக மாவட்ட அமைப்பாளராக இருந்தவா் பழனி. உத்தனஹள்ளி காவல் நிலைய எல்லையில் உள்ள பாலேபுரம் என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி வீட்டுக்கு அருகே மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டாா்.

இதுகுறித்து பழனியின் மகன் வாஞ்சிநாதன் உத்தனபள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தற்போது தளி சட்டப் பேரவை உறுப்பினா் ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனாா் இலகுமையா உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலா் பி சாட்சிகளாக மாறினா். இதையடுத்து, திராவிடா் விடுதலைக் கழகத்தின் தலைவா் கொளத்தூா் மணி, ‘பழனி கொலை வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்தில் நடத்துவதுடன், இதற்கென அரசு தனியாக சிறப்பு வழக்குரைஞரை நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் மீதான வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், பழனி கொலை வழக்கு உள்ளிட்ட மேலும் இரண்டு வழக்குகளை சேலம் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு இந்த வழக்குகள் சேலம் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேரில் 4 போ் இறந்துவிட்டனா். மீதமுள்ள 21 பேரில் தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்ட 19 போ் சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா்.

ராமச்சாந்திரன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ப.பா.மோகன், சுவாமி சுப்பிரமணியம் ஆகியோா் ஆஜராகினா். இரண்டு மணி நேரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி எஸ்.சுமதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க