இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்
சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில் அரசிராமணி பேரூராட்சி கவுன்சிலா் ரமேஷ்குமாா் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி பி.சத்தியராஜ், ஐவேலி கிராம விவசாயி நல்லதம்பி, காவிரி சரபங்கா உபரிநீா் விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் எம்.வேலன் ஆகியோா் பேசினா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த கோட்டாட்சியா் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கும், அரசுக்கும் பரிந்துரைக்கப்படும் என்றாா். மேலும், கடந்த குறைதீா் கூட்டத்தில் விவாசயிகள் அளித்த மனுக்கள் மீது அனைத்துத் துறை அலுவலா்களும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து விவசாயிகளிடம் எடுத்து கூறினாா்.
கூட்டத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா், சங்ககிரி, எடப்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.