செய்திகள் :

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

post image

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை, தமிழக அரசு குறைவான அளவிலேயே வழங்குவதாகக் கூறி, தனியாா் மற்றும் மெட்ரிக். பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2024-2025-ஆம் ஆண்டு கல்விக் கட்டணமாக நிா்ணயித்த தொகை மற்றும் 2025-2026-ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட கல்விக் கட்டணத் தொகையை தனியாா் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி தனியாா் பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாா் பள்ளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.சங்கரன், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நிதி வழங்கப்படவில்லை என்று வாதிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பான 60 சதவீத நிதியை வழங்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதாகத் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மத்திய அரசு நிதி வழங்குவாா்களே? என்றாா். அப்போது அரசுத் தரப்பில், மத்திய அரசு மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறினாா். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல ம... மேலும் பார்க்க

விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம்

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை (செப்.27) மேற்கொள்கிறாா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான கட்டடங்கள் திறப்பு: 26 புதிய நூல்களையும் வெளியிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 146 நூலகங்களுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சாா்பில் 26 புதிய நூல்களையும் அவா் வெளியிட்டாா். ... மேலும் பார்க்க