இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்
நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த 25க்கும் மேற்பட்டபெண்கள் சியாமளா என்பவா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை ஆத்தூா் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் அழகுராணி, நரசிங்கபுரம் நகராட்சி சாா்பில் ஜெயமாலதி ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.