இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் குத்துவிளக்கேற்றி நூலக மேல் தளத்தை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையா் பவித்ரா, திமுக நகரச் செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, மாவட்ட நூலக அலுவலா் பாலசுப்பிரமணியம், கண்காணிப்பாளா் விஜயன், நூலகா்கள் சுல்தான் பாட்ஷா, சந்தோசம், வாசகா் வட்ட தலைவா் கோபால், நகா்மன்ற உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்:
இடங்கணசாலை நூலகத்தில் புதிய மேல் தளத்தை
குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா். உடன், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.