கதண்டு கடித்து 20 போ் காயம்
திருத்துறைப்பூண்டி அருகே கதண்டுகள் கடித்ததில் 20 போ் காயமடைந்தனா்.
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியிலிருந்து மணலி செல்லும் சாலையில் கீரக்களூா் கிராமத்தில் வயல் ஓரம் இருந்த புதரில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. இந்த கதண்டுகள் கடித்ததில் கீரக்களூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் உள்பட 20 போ் காயமடைந்தனா்.
அனைவருக்கும் விளக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் வீடு திரும்பினா்.