சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.
தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அவதானிப்பு எனவும் கைஃப் கூறியுள்ளார்.
என்ன பிரச்னை?
ஆசிய கோப்பையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சு சுமாராகவே இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு கடந்த வியாழக் கிழமை முகமது கைஃப் ஒரு பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “பொதுவாக ரோஹித் சர்மா தலைமையில் பும்ராவுக்கு 1,13, 17, 19-ஆவது ஓவர்கள்தான் பந்து வீசுவார். ஆனால், ஆசிய கோப்பையில் சூர்யகுமார் தலைமையில் பும்ராவுக்கு தொடர்ச்சியாக 3 ஓவர்கள் அளிக்கப்படுகிறது.
காயத்தைத் தவிர்க்க வேண்டுமானால் அவரது உடல் நன்றாக வார்ம்-அப் ஆன பிறகு பந்துவீச வேண்டும்.
14 ஓவர்களில் 1 ஓவர் மட்டுமே பும்ரா இருப்பார் என்ற நிலை பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. உலகக் கோப்பையில் இது இந்தியாவை மேலும் பாதிக்கும்” என்றார்.
பும்ராவின் பதிலடியும் கைஃப்-இன் விளக்கமும்
இதற்கு பும்ரா, “மீண்டும் தவறான கருத்து” எனக் கூறியிருந்தார். பும்ராவின் இந்தப் பதிலுக்கு மீண்டும் கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.
கைஃபின் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்களது நலம் விரும்பியும் உங்களைப் பிடித்தவரும் ஆகிய என்னுடைய இந்தக் கருத்தை கிரிக்கெட்டின் நீண்ட கால அவதானிப்பினால் வந்தது என எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் இந்தியாவுக்கு போட்டியை வென்றுதரும் மிகப்பெரிய வெற்றியாளர்.
இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்ட களத்தில் விளையாடும்போது எவ்வளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும் என எனக்கும் தெரியும் என்றார்.