செய்திகள் :

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையெனில் வேட்டையாடுவோம்" - ஐ.நா-வில் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

post image

பாலஸ்தீனம் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை இன்னும் 10 நாள்களில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது.

உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை போரை நிறுத்த வலியுறுத்தினாலும், கண்டித்தாலும் அமெரிக்கவின் ஆயுத உதவியுடன் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து போரைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது இஸ்ரேல்.

பலியான குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 20,000-க்கும் மேல். எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களின் உயர்களைக் காப்பாற்ற ஐ.நா-வில் பாலஸ்தீனத்தை தனி நாடக அங்கீகரிக்கும் தீர்மானத்தை 157 நாடுகள் நிறைவேற்றின.

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் பட்டினியில் வாடும் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் பட்டினியில் வாடும் பாலஸ்தீனியர்கள்

இத்தகைய சூழலில் ஐ.நா பொதுச் சபையின் 80-வது அமர்வில் உரையாற்ற ஐ.நா வருகை தந்தார் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு.

ஐ.நா-வில் நெதன்யாகு உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியில் ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, அவைக்குலேயேம் பலர் அவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வெளியேறினர்.

ஆனாலும், அவையில் தனது உரையைத் தொடர்ந்த நெதன்யாகு, "உலகில் பெரும்பாலானோர் அக்டோபர் 7, 2023-ஐ மறந்துவிட்டனர். ஆனால், எங்களுக்கு நினைவிருக்கிறது.

207 பணயக்கைதிகள்தான் நாட்டுக்கு திரும்பியிருக்கின்றனர். காஸாவில் மீதமிருக்கும் 48 பீரில் 20 பேர்தான் உயிரோடு இருக்கின்றனர்.

`நாங்கள் உங்களை மறக்கவில்லை. உங்கள் அனைவரையும் மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது'.

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எங்கள் மக்களை விடுவியுங்கள் (ஹமாஸ்). அப்படிச் செய்தால் நீங்கள் உயிர் வாழலாம். இல்லையெனில் இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்.

ஐ.நா பொதுச் சபை அமர்வில் நெதன்யாகு
நெதன்யாகு

இஸ்ரேலும் அமெரிக்காவும் பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை உலகின் மற்ற தலைவர்களை விடவும் அதிபர் டிரம்ப் நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

இஸ்ரேல் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு நேர்மாறானது.

காஸாவை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு மில்லியன் முறை கூறினோம்.

ஐ.நா பொதுச் சபை அமர்வு
ஐ.நா பொதுச் சபை அமர்வு

இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் ஆபத்திலிருந்து வெளியேறுமாறு கெஞ்சுமா... நாஜிக்கள் யூதர்களை வெளியேறச் சொன்னார்களா...

ஹமாஸை சேர்ந்தவர்கள் உணவைத் திருடி, பதுக்கி வைத்து விற்பதால் காஸா மக்கள் பட்டினியாக இருப்பார்கள்.

பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடக அங்கீகரித்தது இஸ்ரேலைப் பொறுத்தவரை தேசிய தற்கொலை.

சுத்த பைத்தியக்காரத்தனம். நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்" என்று கூறி உரையை முடித்தார்.

"மோடி உக்ரைன் போர் பற்றி புதினிடம் பேசினார்" - NATO தலைவர் கருத்தும் இந்திய அரசின் பதிலடியும்!

மேற்கத்திய இராணுவ கூட்டணியான நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, அமெரிக்கா வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியா தரப்பில் ரஷ்யாவிடம் உக்ரைன் போர் யுத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியதை முற்... மேலும் பார்க்க

Sonam Wangchuk: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது; தலைவர்கள் கண்டனம்

சட்டமன்றம் இல்லாமல் நேரடியாக மத்திய அரசின் கீழ் துணை நிலை ஆளுநரின் பார்வையில் இயங்கும் லடாக் யூனியன் பிரதேசத்தின் மக்கள், தங்களுக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்... மேலும் பார்க்க

``படிப்புக்காக நான் 3 நாள் சாப்பிடாமல் இருந்தேன்'' - முதல்வரிடம் பேனா வாங்கிய சுபலட்சுமி பேட்டி

தமிழக அரசு சார்பில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி நேற்று (செப்.25) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழக அரசு கல்விக்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களான ‘காலை உண... மேலும் பார்க்க

லடாக்: `3 இடியட்ஸ்' -க்கு இன்ஸ்பிரேஷன்; மத்திய அரசின் குற்றச்சாட்டு - யார் இந்த சோனம் வாங்​சுக்?

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது. இந்நிலையில்தான் லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ... மேலும் பார்க்க