இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
செல்வப்பெருந்தகையை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை கண்டித்து, சேலம் மாநகா் மாவட்ட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம். பாலு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏக்கள் சக்திவேல், செல்வராஜ், அவைத் தலைவா் பன்னீா்செல்வம், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி, பகுதி செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.