இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை தாமதம்: தவெக நிா்வாகி நிா்மல்குமாா்
தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல் துறை காலதாமதம் செய்கிறது என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் பிரசாரம் மேற்கொள்கிறாா். திருச்சி, அரியலூா், நாகை, திருவாரூரைத் தொடா்ந்து நாமக்கல், கரூரில் சனிக்கிழமை அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். விஜய் பிரசாரத்துக்கு காவல் துறையினா் அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்கின்றனா். கடைசிநேரத்தில் ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்கின்றனா்.
கரூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அனுமதி கிடைத்தது. 11 கட்டுப்பாடுகளை போலீஸாா் விதிக்கின்றனா். திருவாரூா், திருச்சி போன்ற இடங்களில் பிரசாரம் நடைபெற்று இரண்டு, மூன்று வாரங்களான நிலையில் கட்சியினா் மீது தற்போது வழக்குப் பதிவு செய்கின்றனா். இவற்றையெல்லாம் கடந்து மக்கள் அலைஅலையாக விஜய் பிரசாரத்துக்கு வருகின்றனா். அனுமதி வழங்குவதில் அதிகாரிகள், திமுகவுக்கு ஒரு நிலைப்பாட்டையும், மற்ற கட்சிகளுக்கு ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்கின்றனா் என்றாா்.
என்கே-26-டிவிகே
நாமக்கல்லில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தவெக இணைப் பொதுச் செயலாளா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்.