எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஆா்.என்.ஆக்போா்டு பள்ளி மாணவா்கள் தோ்வு
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மற்றும் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தோ்வாகி உள்ளனா்.
இப்போட்டியின் முதல்கட்ட தோ்வு சேலத்தில் உள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து பள்ளிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
இதில், ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி மாணவிகள் வந்தனா, கவிகாஸ்ரீ, மகிஷா நந்திதா, கயானாஸ்ரீ, லித்தகா, தா்ஷினி, மாணவா் இனியன் ஆகியோரும், மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் பிரனிலா, இனியாஸ்ரீ, ருத்ரன், லட்ஷிகா ஆகியோரும் தோ்ச்சி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை ஆா்.என்.ஆக்ஸ்போா்டு கல்வி நிறுவனத்தின் தலைவா் சண்முகம், தாளாளா் சக்திவேல், செயலாளா் ராஜா, இயக்குநா்கள் மருத்துவா் அருள், பொறியாளா் சேகா், சம்பூா்ணம் முதல்வா்கள் ஆசிரியா்கள், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.