செய்திகள் :

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அவரது தாயார் மெலானியா மற்றும் சகோதரி இவாங்கா டிரம்ப்பின் சொத்து மதிப்பைவிட அதிகரித்துள்ளது.

19 வயதே ஆகும் பாரன் டிரம்ப்பின் சொத்து மதிப்பு 150 மில்லியன் (சுமார் ரூ.1,330 கோடி) டாலராக உயர்ந்துள்ளது. கிரிப்டோகரன்சி முதலீட்டால்தான் அவரது இந்த சொத்து மதிப்பு உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தற்போது கிரிப்டோகரன்சியில் 525 மில்ல்லியன் டாலர் மதிப்புகளை பாரன் டிரம்ப் தன்வசம் வைத்துள்ளார்.

43 வயதான இவாங்கா டிரம்ப் 100 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் நிலையில், 19 வயதேயான பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சொத்து மதிப்பைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கிரிப்டோ குறித்து டிரம்ப்பையும் அறியச்செய்து, அவரின் சொத்து மதிப்பையும் உயரச் செய்திருக்கிறார் பாரன் டிரம்ப்.

செல்வந்தர் குடும்பங்களின் வரிசையில் 7.3 பில்லியன் டாலர் மதிப்புடன் டிரம்ப்பின் குடும்பம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

Donald Trump's son Barron Trump’s net worth revealed: now richer than some of his famous family members

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வெளிநாட்டு பர்னிச்சருக்கு 30 சதவிகிதமும், கனரக லாரிகளுக்கு 2... மேலும் பார்க்க

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு வி... மேலும் பார்க்க

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்... மேலும் பார்க்க

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: வெனிசுலாவில் வியாழக்கிழமை நண்பகல் 12.25 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம்... மேலும் பார்க்க

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது. இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமை... மேலும் பார்க்க