செய்திகள் :

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு; பின்னணி என்ன?

post image

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு மசூதி அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாலேகாவில் நடந்த இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சில இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா சிங், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர்.

ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித்
ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித்

பிரசாத் புரோஹித் 8 ஆண்டுகள் சிறையிலிருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாலேகாவ் குண்டு வெடிப்புக்குத் தேவையான நிதி, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்ததாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது தீவிரவாத தடுப்புப் படை குற்றம் சாட்டி இருந்தது.

அபினவ் பாரத் என்ற இந்து அமைப்போடு சேர்ந்து குண்டு வெடிப்புக்கான சதி வேலையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை ஆரம்பத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையும் பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரித்தன.

மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் கடந்த ஜூலை 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார். அவரைக் கௌரவிக்கும் விதமாக அவருக்கு ராணுவத்தில் கர்னல் அந்தஸ்து கொடுக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்திருந்ததாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரசாத் புரோஹித் ராணுவத்திலிருந்து கர்னலாக ஓய்வு பெறுகிறார்.

லடாக்: `3 இடியட்ஸ்' -க்கு இன்ஸ்பிரேஷன்; மத்திய அரசின் குற்றச்சாட்டு - யார் இந்த சோனம் வாங்​சுக்?

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக்கை, மத்திய பாஜக அரசு 2019ல் அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமாக மாற்றியது. இந்நிலையில்தான் லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ... மேலும் பார்க்க

ஆபரேஷன் கொங்கு: ஆட்டத்தை ஆரம்பித்த செந்தில் பாலாஜி; கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் மாற்றம் - ஏன்?

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர்திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் நா.கார்த்திக். இவரை திமுக தீர்மானக்குழு அணியின் செயலாளராக நியமனம் செய்துவிட்டு, பீளமேடு பகுதிச் செயலாளராக இருந்த துரை. ச... மேலும் பார்க்க

ஓபிஎஸ் உடன் சந்திப்பா? - உண்மையை உடைக்கும் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார். செங... மேலும் பார்க்க