Sonam Wangchuk: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது; தலைவர்கள...
யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!
யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், 22 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யேமன் தலைநகர் சனா உள்ளிட்ட நகரங்களின் மீது, நேற்று (செப். 25) மதியம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில், 4 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 முதியவர்கள் கொல்லப்பட்டதாக, ஹவுதிகளின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 59 குழந்தைகள், 35 பெண்கள் மற்றும் 80 முதியவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்களில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுபற்றி, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஹவுதிகளின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?