செய்திகள் :

மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் மருந்துகளுக்கு 100 சதவிகித வரிகளை அறிவித்ததால், முதலீட்டாளர்கள் மருந்து மற்றும் ஐடி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததை தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் வரை சரிந்து முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 827.27 புள்ளிகள் சரிந்து 80,332.41 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 733.22 புள்ளிகள் சரிந்து மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு 80,426.46 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 236.15 புள்ளிகள் சரிந்து மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு 24,654.70 புள்ளிகளாக நிலைபெற்றது. பங்குச் சந்தையில், தொடர்ந்து 6-வது நாளாக 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அதிபர் டிரம்ப்.

இதனை தொடர்ந்து பெரும்பாலான மருந்து சார்ந்த பங்குகள் சரிந்த நிலையில், பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீட்டு எண் 2.14 சதவிகிதமும், வோக்ஹார்ட் பங்குகள் சுமார் 9.4 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் எச்.சி.எல். டெக் ஆகியவை சரிந்தும் லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஐடிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தன.

நிஃப்டி-யில் இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, எம் அண்ட் எம், எடர்னல், டாடா ஸ்டீல் ஆகியவை சரிந்த நிலையில் லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி ஆகியவை உயர்ந்தும் வங்கி, மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், உலோகம், ஐடி, தொலைத்தொடர்பு, மருந்து, பொதுத்துறை வங்கி ஆகிய அனைத்து துறை குறியீடுகளும் தலா 1 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிவடைந்தன.

அக்டோபர் 1 முதல் பிராண்டு மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு 100% அதிக வரியை அறிவிப்பை தொடர்ந்து, இன்றைய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் முடிவடைந்தன. சமீபத்திய எச்-1பி விசா கட்டணங்கள் உயர்வை அடுத்து எதிர்பாராத இந்த நடவடிக்கை ஏற்கனவே பலவீனமாக இருந்த முதலீட்டாளர்களின் உணர்வை முற்றிலும் உலுக்கியுள்ளது.

கிராம்டன் கிரீவ்ஸ் கன்சூமர் எலக்ட்ரிக்கல், சன் பார்மா, பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோநெட் எல்என்ஜி, ஃபைவ்-ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ், ஐஆர்பி இன்ஃப்ரா, டிசிஎஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார குறைந்த அளவை எட்டியது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹேங் செங் ஆகியவை கணிசமாக சரிந்தது முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,995.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.27 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 69.23 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: செல்போன், மின்னணு சாதனங்களுக்கு ஃபிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் திட்டம்!

Benchmark stock indices Sensex and Nifty tumbled nearly 1 per cent on Friday, marking their sixth consecutive day of decline, following heavy selling in pharma and IT shares as US President Donald Trump announced 100 per cent duties on pharmaceutical drugs from next month.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் திருப்புமுனை ஏற... மேலும் பார்க்க

செல்போன், மின்னணு சாதனங்களுக்கு ஃபிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் திட்டம்!

பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், ஃபிளிப்கார்டு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.இ-வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், பழைய பொருள்களைக் கொடுத்த... மேலும் பார்க்க

அதிகம் நிறுவப்படும் கடன், பட்டுவாடா செயலிகள்

இந்தியாவின் நிதிநுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் வங்கி சேவை செயலிகளைவிட, கடனளிப்பு மற்றும் பட்டுவாடா சேவை செயலிகளை வாடிக்கையாளா்கள் தங்களின் அறிதிறன் பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) அதிகம் நிறுவுவதாக ரிசா்வ் ... மேலும் பார்க்க

ஹெச்பிவி தடுப்பூசி: விடால் ஹெல்த் - சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம்

கா்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மூன்றாம் தரப்பு நிா்வாகச்சேவை (டிபிஏ) நிறுவனமான விடால் ஹெல்த்தும் உலகின் மிகப்பெரிய த... மேலும் பார்க்க

ரூ.10,499-க்கு ரியல்மி பி3 லைட் 5-ஜி: சிறப்பம்சங்கள் என்ன?

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 லைட் 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பி-3 லைட் 5ஜிரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், நவீன அம்சங்களைக் கொ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு!

தொடர்ந்து 5-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பங்குச் சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,574.31 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. காலை 11.30 12... மேலும் பார்க்க