செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர் டு திருப்பதி: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; பிரமோற்சவத்திற்குத் தயார்

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழாவின் கருடசேவை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதற்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக 27 ஆம் தேதி அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.

ஆண்டாள் நாச்சியார்

இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கோயில் யானையான ஜெயமால்யதாவிற்கு அலங்காரங்கள் நடைபெற்றன. அதனையடுத்து திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யேக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாலை

தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை திருகோயிலின் சார்பில் ஸ்தானிகர் ஹயக்ரீவாஸ் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சார்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்; காலபைரவ மகாபூஜையின் நன்மைகள்; சங்கல்பியுங்கள்!

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் காலபைரவ மகாபூஜை நடைபெற உள்ளது. வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்! பைரவ ப... மேலும் பார்க்க

நெல்லை, மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணர்: ஜாதகத்தை வைத்து வேண்டினால் கல்யாண வரம் தரும் புருஷோத்தமர்!

மன்னார்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில். பசுமையும் எழிலும் கொஞ்சும் இந்த பூமியில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

திருப்பதி கோயில்: 3 கிலோ 860 கிராம் தங்கப் பூணூல் காணிக்கை; அதன் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி கோயிலில் காணிக்கையாக பணம், நகைகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.ஆனால், நேற்று (செப். 24) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் புவ்வாடா மஸ்தான் ராவ் - ரேகா தம்ப... மேலும் பார்க்க

திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் தொல்லைகள் நீங்கும்!

தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம். இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண... மேலும் பார்க்க

நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் கோயில் - இந்தியாவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரத்தில் உள்ள ஒரு கோயில், நவராத்திரி பண்டிகையின் 9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோய... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்: நவராத்திரி விழாவில் காத்யாயினி அலங்காரம் | Photo Album

கும்பகோணம்:பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்... மேலும் பார்க்க