செய்திகள் :

வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்; காலபைரவ மகாபூஜையின் நன்மைகள்; சங்கல்பியுங்கள்!

post image

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் காலபைரவ மகாபூஜை நடைபெற உள்ளது. வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்! பைரவ பூஜையின் நன்மைகள்! உடனே சங்கல்பியுங்கள்!

காலபைரவ மகாபூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஈசனின் வேக வடிவங்களில் ஸ்ரீகாலபைரவர் முக்கியமானவர். பிரம்மனின் ஆணவத்தை அடக்கியவர். கால பைரவர் வேண்டியதை வேண்டியவாறே வழங்ககூடியவர். ​8 திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராக விளங்கும் இவருக்கு தேய்பிறை அஷ்டமி நாள் விசேஷமானது.தேய்பிறை அஷ்டமி நாளில் இவரை வழிபட்டு அஷ்ட லட்சுமியரும் நவநிதிகளும் பெற்றதாக ஐதிகம். இதனால் இந்நாளில் வழிபட கடன் பிரச்னைகள் தீர்ந்து செல்வம் பெருகும் என்பதும் நம்பிக்கை.

அதிலும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கான பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டியவை யாவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தென்னக காசி என்று போற்றப்படும் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஊரை அடுத்து உள்ள ராட்டைச் சுற்றிபாளையம் மகா காலபைரவர் ஆலயத்தில் இந்த முறை மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் உங்களை வாட்டும் துன்பங்கள், அச்சங்கள் யாவும் விலகும் என்பது உறுதி.

காலபைரவ மகாபூஜை

மேலும் பதினாறு வகையான செல்வங்களும், நிம்மதியும் கிடைக்கும். வேண்டிய யாவும் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நடக்கும். நீதி கிடைக்க, மரண பயம் நீங்க, திருஷ்டி-செய்வினை நீங்க, பாவங்கள் தீர, பழிகள் நீங்க, அகால கஷ்டங்கள் போக, அனைத்து விதமான பிரச்சனைகள் தீர, ஆபத்தில் உதவி கிடைக்க இந்த பூஜை அவசியம் என்கிறது சாஸ்திரம். காலபைரவரை சரண் அடைந்தவருக்கு இனி கஷ்டமே இல்லை என்பதே வழக்கமாகும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எனவே 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் ஈரோடு அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. இதில் எல்லோரும் கலந்து கொண்டு உங்கள் கஷ்டங்களைத் தீர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சௌபாக்கியமும் பெற வேண்டுகிறோம். ஈரோடு அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மிகப்பெரிய பைரவர் சிலை 39 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆலய முகப்பு, கருவறை, பிராகார மண்டபத்தின் மேற்பகுதியில் என இந்த ஆலயத்திலேயே 64 பைரவர்களையும் தரிசிக்க முடியும் என்பதும் சிறப்பு.

புராண காலம்தொட்டே புகழ்பெற்று வந்த இந்த ஆலயம், பிறகு சிதைந்துவிட அதே இடத்தில் ஆதிசித்தர். ஸ்ரீவிஜய் சுவாமிகள் ஆலயத்தை பிரமாண்டமாக எழுப்பி பல்வேறு பூஜைகளையும் விழாக்களையும் நடத்தி வருகிறார். ராகு காலம், அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை நாள்களில் இங்கு அமோகமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சக்தி விகடன் வாசகர்கள் நன்மைக்கெனவே இந்த காலபைரவ பூஜையை நடத்தித்தர உள்ளார்கள். எனவே துன்பப்படும் அனைவரும் இந்த பூஜையில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம். ஸ்ரீகாலபைரவரின் அருளால் நன்மைகள் சூழ பிரார்த்திக்கிறோம்.

காலபைரவ மகாபூஜை

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

QR CODE FOR KALABAIRAVA MAHA POOJAI

காலபைரவ மகாபூஜை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

ஸ்ரீவில்லிபுத்தூர் டு திருப்பதி: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; பிரமோற்சவத்திற்குத் தயார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு... மேலும் பார்க்க

நெல்லை, மன்னார்கோவில் ஸ்ரீவேதநாராயணர்: ஜாதகத்தை வைத்து வேண்டினால் கல்யாண வரம் தரும் புருஷோத்தமர்!

மன்னார்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில். பசுமையும் எழிலும் கொஞ்சும் இந்த பூமியில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

திருப்பதி கோயில்: 3 கிலோ 860 கிராம் தங்கப் பூணூல் காணிக்கை; அதன் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி கோயிலில் காணிக்கையாக பணம், நகைகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.ஆனால், நேற்று (செப். 24) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் புவ்வாடா மஸ்தான் ராவ் - ரேகா தம்ப... மேலும் பார்க்க

திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் தொல்லைகள் நீங்கும்!

தஞ்சை- திருவையாறு செல்லும் பாதையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். வைணவ திவ்ய தேசங்களில் 7-வது தலம். இந்த அற்புதத்தலத்தில்தான் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள் கோயில்கொண... மேலும் பார்க்க

நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் கோயில் - இந்தியாவில் எங்கே இருக்கிறது தெரியுமா?

குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரத்தில் உள்ள ஒரு கோயில், நவராத்திரி பண்டிகையின் 9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோய... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்: நவராத்திரி விழாவில் காத்யாயினி அலங்காரம் | Photo Album

கும்பகோணம்:பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்க்கை அம்மனுக்கு காத்யாயினி அலங்காரம்துர்... மேலும் பார்க்க