நானியின் தி பாரடைஸ்: 2 புதிய அறிவிப்புகள்!
நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் குறித்த இரண்டு புதிய அறிவுப்புகள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலத்திலும் அடுத்தாண்டு மார்ச். 23ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் நானி தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வியாபார ரீதியாகவும் பெரிய நட்சத்திர நடிகராக நானி உருவெடுத்துள்ளார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் அப்டேட் நாளை (செப்.27) காலை 10.08 மணிக்கும் மாலை 5.04 மணிக்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 ரூ.100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
THE DEMON IS ALWAYS GREENER ON THE OTHER SIDE #TheParadise update tomorrow - 10:08 AM & 5:04 PM ❤
— THE PARADISE (@TheParadiseOffl) September 26, 2025
Stay tuned!
In CINEMAS , .
Releasing in Telugu, Hindi, Tamil, Kannada, Malayalam, Bengali, English, and Spanish.
Natural Star @NameisNani in… pic.twitter.com/V0zhlkMaeo