செய்திகள் :

அதிகம் நிறுவப்படும் கடன், பட்டுவாடா செயலிகள்

post image

இந்தியாவின் நிதிநுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் வங்கி சேவை செயலிகளைவிட, கடனளிப்பு மற்றும் பட்டுவாடா சேவை செயலிகளை வாடிக்கையாளா்கள் தங்களின் அறிதிறன் பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) அதிகம் நிறுவுவதாக ரிசா்வ் வங்கியின் செப்டம்பா் மாத இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, ‘நிதிநுட்ப வாடிக்கையாளா் அனுபவத்தின் உண்மைக் கதை’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கி சேவைகளை வழங்கும் நிதிநுட்ப நிறுவன செயலிகளைவிட பணம் செலுத்துதல், கடன் வழங்கல் சேவைகளை வழங்கும் நிதிநுட்ப நிறுவனங்களின் செயலிகளே அதிகம் நிறுவப்படுகின்றன.

இந்த மூன்று துறைகளையும் சோ்ந்த 11 செயலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது.

ஒவ்வொரு தனித்துவமான நிதி சேவை செயலி நிறுவப்பட்ட பிறகும் அதற்கு வாடிக்கையாளா்கள் மதிப்புரைகளை (ஸ்டாா்கள்) அளிப்பதற்கான வாய்ப்பு 0.54 சதவீதமாக உள்ளது. இது, பணம் செலுத்துதல் மற்றும் கடன் வழங்கல் செயலிகளுக்கு 0.6 சதவீதமாகவும், வங்கி சேவை வழங்கும் செயலிகளுக்கு சற்று குறைவாகவும் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட இந்த செயலிகள் சுமாா் 60 லட்சம் மதிப்புரைகளைப் பெற்றுள்ளன. நிதிநுட்ப நிறுவன செயலிகளுக்கான மொத்த மதிப்புரைகளில் 20 சதவீதம் ஒரு நட்சத்திரமாகவும், 67 சதவீதம் ஐந்து நட்சத்திரங்களாகவும் உள்ளன. இவை ஒட்டுமொத்த மதிப்புரைகளில் 87 சதவீதத்தை உள்ளடக்குகின்றன.

இந்திய நிதிநுட்ப சூழல் குறித்து வாடிக்கையாளா்களிடையே நோ்மறையான உணா்வு நிலவுவது இந்த ஆய்வில் தெரியவருகிறது. வாடிக்கையாளா்களிடையே நிதி சேவை, செயலி செயல்பாடு, தொழில்நுட்ப சிக்கல்கள், கடன் விண்ணப்ப முறை, கடன் ஒப்புதல் அளிக்கப்படும் முறை, கடன் வரம்பு உள்ளிட்டவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. வங்கி சேவை செயலிகளைப் பொருத்தவரை வாடிக்கையாளா் சேவை குறித்து பயனாளிகள் அதிக கவலை தெரிவிக்கின்றனா் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை 56.9 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புரைகள், தனித்துவ நிறுவல்கள், மதிப்புரை எண்ணிக்கைகள், செயலி புதுப்பிப்புகள் உள்ளிட்ட தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹெச்பிவி தடுப்பூசி: விடால் ஹெல்த் - சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம்

கா்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மூன்றாம் தரப்பு நிா்வாகச்சேவை (டிபிஏ) நிறுவனமான விடால் ஹெல்த்தும் உலகின் மிகப்பெரிய த... மேலும் பார்க்க

ரூ.10,499-க்கு ரியல்மி பி3 லைட் 5-ஜி: சிறப்பம்சங்கள் என்ன?

ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 லைட் 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பி-3 லைட் 5ஜிரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், நவீன அம்சங்களைக் கொ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு!

தொடர்ந்து 5-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பங்குச் சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,574.31 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. காலை 11.30 12... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் காலை,... மேலும் பார்க்க

சிஎன்ஜி-யில் பேருந்துகள் : எக்கோ ஃப்யூயலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: பண்டிகைக் கால எழுச்சியை எதிா்பாா்க்கும் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்வோரின் உற்சாகம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இந்தப் பண்டிகைக் காலத்தில் பெரிய விற்பனை எழுச்சியை இந்தியாவின் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதனத் துறை நிறுவனங்கள் எதிா்... மேலும் பார்க்க