செய்திகள் :

ஹைதராபாத் எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே பேருந்து தீ: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 35 பயணிகள்!

post image

ஹைதராபாத் (தெலங்கானா):ஹைதராபாத்தில் உள்ள எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 35 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

தெலங்கான மாநிலம், ஹைதராபாத் எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு தனியார் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து பேருந்தில் இருந்த 35 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டுள்ளனர். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்தது

இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து ஜூபிலி ஹில்ஸ், சனத் நகர் மற்றும் செயலகத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்து 35 பயணிகளும் பாதுகாப்பாக விரைந்து வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் அந்தளவில் கல்வி வளர்ச்சி அதிகரித்ததா? திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்

A private travel bus caught fire near the SR Metro station in Hyderabad on Thursday night, but all 35 passengers on board were safely evacuated, as per the fire official.

2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்

சென்னை: 2026 பேரவைத் தேர்தல் விஜய்க்கு, அரசியல், தேர்தல் என்றால் என்ன என்பதை புரிய வைக்கும் என்றும், விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டம் நாகையில் வரவில்லை, சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் அவர் மக... மேலும் பார்க்க

செஞ்சி: தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலி

செஞ்சி அருகே தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை... மேலும் பார்க்க

பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படம் எடுத்த சக ஊழியர் கைது

மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்ததாக மின் வாரிய சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி நிலவரம்: இன்று எவ்வளவு உயர்ந்து?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்... மேலும் பார்க்க

ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி

ரஷியா தொடங்கிய போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் உதவுமாறு கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றார... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு வெள்ளிக்கிழமை காலை 8,419 அடியிலிருந்து வினாடிக்கு 7,645 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வ... மேலும் பார்க்க