செய்திகள் :

மீண்டும் நியூசிலாந்து அணியுடன் இணைந்த பயிற்சியாளர்! பதவி விலகிய 4 மாதங்களில்..!

post image

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் விலகிய கேரி ஸ்டெட், உயர் செயல்திறன் பயிற்சியாளராக மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர், நியூசிலாந்து அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.

53 வயதான கேரி ஸ்டெட் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஐசிசி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி என பல்வேறு உயரங்களை எட்டியுள்ளது.

மேலும், இவரது தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில், தனது விலகல் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் இணைந்துள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது உள்பட இதுவரை 34 ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்கான சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் கேரி ஸ்டெட்.

உயர் செயல்திறன் பயிற்சியாளராக கேரி பணியாற்றினாலும், அவர் 2025-26 ரஞ்சி டிராபி சீசனுக்கான ஆந்திர அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படுவார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதை இது தடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரி ஸ்டெட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ஜூன் மாதம் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவின் ராப் வால்டர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

அவர் 2028 ஆம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gary Stead returns to NZC as high-performance coach

இதையும் படிக்க... இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவதென்ன?

ஆசியக் கோப்பைத் தொடரில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுடன் முதல்முறையாக இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கருத்து தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்ப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தி... மேலும் பார்க்க

வங்கதேச பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்! இறுதிக்குச் செல்ல 136 ரன்கள் இலக்கு!

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் அணி 136 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் ... மேலும் பார்க்க

பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரி... மேலும் பார்க்க

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள்... மேலும் பார்க்க