2026 தேர்தல் விஜய்க்கு அரசியல், தேர்தல் என்ன என்பதை புரிய வைக்கும்: எஸ்.வி.சேகர்
Sugar Dating: பணக்கார வயதானவர்கள் மீது தோழமை கொள்ளும் இளம் வயதினர் - இந்த போக்கு ட்ரெண்டாவது ஏன்?
தற்போது இருக்கும் நவீன காலத்தில் இளைய தலைமுறையினர், உறவுகளை வளர்க்க சமூக வலைதளங்களை நாடிச் செல்கின்றனர். டேட்டிங் முதல் திருமணம் செய்வது வரை ஆன்லைனிலேயே பார்க்கின்றனர். இப்படி ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும் வேளையில் தற்போது ”சுகர் டேட்டிங்” ( Sugar Dating) என்ற ட்ரெண்ட் அயல்நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இந்த சுகர் டேட்டிங் என்றால் என்ன, இதன் பின்னணி என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
சுகர் டேட்டிங் என்பது வெளிநாடுகளில் பரவலாகப் பரவி வரும் ஒரு கலாசாரமாக இருக்கிறது. இதில் இளைய தலைமுறையினர்கள் வயதானவர்களுடன் தோழமை கொள்கிறார்கள்.
இந்த தோழமை மற்றும் நெருக்கத்திற்காக நிதிகளை பகிர்ந்து கொள்கின்றனர். இளைய தலைமுறையினர்கள் வயதானவர்களுக்கு ஒரு தோழமையை அளிக்கிறார்கள். பெரும்பாலும் கோடீஸ்வரர்களையே டேட்டிங் செய்கிறார்கள்.

இந்த தோழமையில் காதல் அல்லது உடல் ரீதியான எந்த நெருக்கமும் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த வயதானவர்கள் உடனான தோழமையில் அர்த்தமுள்ள உரையாடலுக்காக மட்டுமே பணம் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சுகர் டேட்டிங் உலக அளவில் ஒரு போக்காக மாறி இருக்கிறது. ஆன்லைன் தளங்கள், செயலிகள் மூலம் இது பயனர்களுக்கு எளிதாக்கப்படுகிறது.
தனிமையை போக்க ஆன்லைனில் மூலம் நண்பர்களுடன் பழகிய காலங்கள் மறைந்து தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க தங்களது தோழமைகளை வயதானவர்களுக்கு வழங்கும் ஒரு புதிய கலாசாரம் உருவெடுத்து வருகிறது.