சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகிய இருவரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகிய இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்குமாறு புதன்கிழமையில் (செப். 24) மத்திய அரசு அறிவித்தது.
2023, அக்டோபர் மாதத்தில் கூடுதல் நீதிபதிகளாக என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் இருவரும் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
செப். 15 ஆம் தேதியில் உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில் செய்யப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது