செய்திகள் :

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வு வருகிற டிச. 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா், கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள், அரசு தொழில் பயிற்சி மையங்களில் நடைபெற்ற மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தோ்ச்சியடைந்தவா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் மின் வயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் செய்முறை அனுபவம் கொண்டவராகவும், 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. இந்தத் தோ்வுக்கான விண்ணப்பப் படிவம், விளக்கக் குறிப்பேட்டை ட்ற்ற்ல்ள்://ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு தொழில் பயிற்சி நிலையம், கோ.புதூா், மதுரை 625007 என்ற முகவரிக்கு அக். 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மதுரை கோ.புதூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தை 0452 2903020 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: குமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கன... மேலும் பார்க்க