ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு
மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). விவசாயியான இவா், காளை மாடு வளா்ந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி வீட்டில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்துள்ளாா். அப்போது, மாடு கணேசனை குத்தியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.